வடமாகாண உள்ளக பிரதம கணக்காளருக்கு அதிரடி இடமாற்றம்!

வடமாகாண உள்ளக பிரதம கணக்காளராக கடமையாற்றிய சுரேஜினியை வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு இட மாற்றுமாறு வடமாகாண ஆளுநர ஜீவன் தியாகராயா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மத்தியில் இடம்பெற்ற நிதி நிர்வாக மோசடிகள், மந்திகை ஆதார வைத்தியசாலைகளில் இடம்பெற்ற நிதி முறைகேடு மற்றும் யாழ் மாநகர சபை உத்தியோதரால் மேற்கொள்ளப்பட்ட பல லட்சம் ரூபாய் மோசடி தொடர்பில் ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பிற செய்திகள்

Leave a Reply