வடக்கில் சிறுமிகள் தொடர்ச்சியாக துஸ்பிரயோகம்-தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவை கவலை!

பெண் பிள்ளைகளை பாதுகாருங்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் இணைப்பில் இல்லை என தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்துள்ளார் .

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை, முல்லை.இராசாவின் தோட்ட சிறுமிகள் துஷ்பிரயோகச்சான்று முன்வைப்பு பற்றிய ,ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் இது பற்றி தெரிவிக்கையில் ,

இந்நிலையில் அண்மைக்காலமாக வடக்கு மாகாணத்தில் கலாச்சார புரள்வும் பாலியல் துஸ்பிரயோகங்களும் இடம்பெற்று வருகின்றன.

சமீப காலமாக மிகவும் கூடுதலான முறையில் பிள்ளைகள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் . இப்படியான செயல்களை முன்னைய கால கடடங்களில் நாங்களும் ,எங்களுடைய முன்னோர்களும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. முக்கியமாக வட ,கிழக்கு மக்கள். ஆனால் இன்று ,இந்த நாட்டில் இருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும் , இவ்வாறான விடயங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.

அண்மைய காலத்தில் குறிப்பிட்ட பாடசாலை ஒன்றில் கூட, இவ்வாறான விடயம் ஒன்று நடை பெற்றது .

அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் மற்றும் மேல் வகுப்பு மாணவர்கள், சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்திருக்கின்றனர் .
இந்த விடயம் அனைத்து தரப்பினாலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம் .

ஆனால் அதிபராக இருந்தாலும் சரி ,பிரதி அதிபராக இருந்தாலும் சரி ,கல்வி அமைச்சாக இருந்தாலும் சரி , இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காதிருப்பது கவலைக்கிடமாக உள்ளது .

முல்லைத்தீவு மாணவர்கள் பல காலமாக யுத்ததில் இருந்து , பல இழப்புக்களை சந்தித்து ,கஷ்டமான சூழ் நிலையில் கல்வி கற்று வருகின்றனர் .மாவீரர்கள் ,மாவீரர் பிள்ளைகள் ,பெற்றோரை இழந்த பிள்ளைகள் , இவ்வாறானவரே அங்கு கூடுதலாக காணப்படுகின்றனர் .

இந்த போராடத்தில் சம்மந்தபட்ட பிள்ளைகளும் அவ்வாறே , அந்த மாணவர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமே தவிர , அநீதிகளுக்கு உட்படுத்தவோ ,அநீதி நடக்க பார்த்து கொண்டோ இருக்க கூடாது .மேலும் இவ்வாறான விடயங்கள் முல்லைதீவில் மட்டுமல்ல ,யாழ் மாவட்டத்திற்க்குள்ளும் பல பாடசாலை மாணவிகளுக்கு இடம்பெறுகின்றன .

இனி வருகின்ற காலங்களில் ஆசிரியர்கள் மாணவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட் படுத்துவாராக இருந்தால் ,கடும் தண்டனை வழங்கப்படுவதோடு மட்டுமல்லாது , அவர்களின் உறவினர்களுக்கும் சேர்த்து தண்டனை வழங்கப்படும் .

ஒரு முறை ,பாரியளவில் தண்டனையை நீதித்துறை வழங்கினால்தான் அடுத்த முறை அதை மற்றவர்கள் செய்ய தயங்குவார்கள் .

இன்று பாடசாலை மட்டங்களில் நடைபெறுவது நாளை பல்கலைக்கழகம் வரை நடைபெறுகின்றது . இனி இவாறான பிரச்சனைகள் நடக்குமேயானால் ,இப் பிரச்னையை குடும்பம் சார்ந்து ,அயல் சார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் .

இவ்வாறான விடயங்களை வெளியில் இருந்து வந்து, யாரும் செய்வதில்லை ,நம்மோடு இருந்து நம் உணர்வுகளை புரிந்தவர்கள் கொண்டவர்களே இவ்வாறு செய்கின்றனர் .
முல்லைதீவு சம்பவத்தில் ,தொடர்பு பட்டவர்களில் சிலர் இன்னும் கைது செய்யப்படவில்லை .முறையான விசாரணைகளை மேற் கொண்டு நபர்கள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் .

யாழ்ப்பாணத்தில் பல மகளீர் அமைப்புக்கள் இருந்த போதிலும் ஒரு குரல் கூட ஓங்கி ஒலிக்கவில்லை .இவர்களை நான் கூடுதலாக கூறுவதற்கு காரணம்? எல்லா விடயங்களுக்கும் வந்து நிற்பவர்கள் இந்த விடயங்களுக்கு மாத்திரம் முன் வரவில்லை . 6வயது பிள்ளை உட்பட 73வயது மூதாட்டி வரை இப் பிரச்சனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் , அது வரை இந்த மகளீர் குழுக்கள் எங்கே சென்று விட்டது ? தூங்கி கொண்டு இருக்கின்றார்களா ?

நாட்டின் தற்போதைய பிரச்சனையை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு பல செயற்பாடுகள் நடைபெறுகின்றன . இவ்வாறான விடயம் தொடர்பில் , தமிழ் பண்பாட்டு பேரவை பல வழிகளில் கதைத்துக்கொண்டு இருக்கிறது .தீவிர பிரச்சாரம் ஒன்றிணையும் மக்கள் மத்தியில் முன்வைக்க உள்ளோம் .

மேலும் நாட்டில் எரிபொருள் பிரச்னை நிலவி வருகின்றது . நாடு ரீதியாக இப் பிரச்னை காணப்பட்டாலும் ,நம் மக்கள் வீதியில் நிற்கின்றனர் .பெற்றோல் வரும் வராதென்பது யாருக்கும் தெரியாது .

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ,ஒட்டு மொத்த அரசியல்திகையும், வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை பார்த்து ஒன்று கேட்க்கின்றேன் ?

என்றாவது ஒரு நாள் ,நீங்கள் எங்கள் மக்களுடன் கதைத்துள்ளீர்களா ? உங்கள் நிலைமை என்ன ? என்று மக்களுடன் மனம் விட்டு பேசியிருக்கின்ரீர்களா ?
நீங்கள் கொழும்பில் இருக்கின்ரீர்கள் .மக்கள் இங்கே அல்லோலப்படுகின்றனர் .

உங்களால் பவுசரையோ ,பெற்றோலையோ இழுத்து வர முடியாது என்று எங்கள் மக்களுக்கு தெரியும் . எங்கள் மக்கள் முட்டால்கள் இல்லை . ஆனால் எங்களுடைய இடத்தில இருந்து பேசுவதிற்க்கோ , எங்களுக்கு ஆதரவாக பேசுவதற்கோ யாருமில்லையென்றே மக்கள் ஆதங்கப்படுகின்றனர் என்று தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்தார் .

பிற செய்திகள்

Leave a Reply