தமிழ் இனத்தை அழித்து நாட்டை ஆளும் அரசாங்கம் ,தற்போது முழு நாட்டையும் அளித்து தம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ,கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையில்,மக்களின் சாதாரண சொத்துக்கள் அழிக்கப்படும் நிலையே காணப்படுகிறது.விசேட சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை.ஆனால் சாதாரண மக்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து வீதியில் நிற்கின்றனர்.இதை கன்டுகொள்ளாமல் இரண்டு வாரத்தில் தீர்மானங்களை எடுப்போம் என்று அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே நாம் வடக்கு கிழக்கில் உள்ள அரச அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை அணுகி சில விடயங்களை செய்வதற்கு முயற்சிக்கின்றோம்.அதிலும் எரிபொருள் சம பங்கீட்டு அடிப்படையில் கிடைக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.இது தவிர அரச தரப்பில் உள்ள சில மோசடி வேலைகளையும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.இது தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் சில விடயங்களை முன்வைத்துள்ளோம்.சில மோசடிகள் இடம்பெற்றுள்ளது என்பதை கொள்கை அளவில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.நாட்டில் எரிபொருள் இல்லையே என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றார்.
கடந்த ஜூன் மாதம் 13 ஆம் குருந்தூர் மலையில் இடம்பெற்ற சமபவம் அனைவருக்கும் தெரியும்.அங்கு விகாரை ஒன்றை கட்டி,புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு முயற்சி எடுத்திருந்தனர்.
அவர்கள் அங்கே நீதி மன்ற விதிமுறைகளை மீறித் தான் அங்கே நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டது.அதன் பின்னர் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தால் புத்தர் சிலை வைக்கும் நிகழ்வுகள் கைவிடப்பட்டது.
அதன் பின்னர் 15 ஆம் திகதி நடு இரவில் மாதவன் மேயரின் வீட்டுக்கு பிஸ்டல் துப்பாக்கியுடன் சென்ற இரண்டு பேர் ,அவரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி,குடும்பத்துக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
அதாவது குருந்தூர் மலை விவகாரத்தில் இவர் தான் பிரதான நபர் என குறிவைத்து இந்த நடவடிக்கையில் சி.ஐ.டி என்று தம்மை அடையாளம் காட்டியவர்கள் மேற்கொண்டுள்ளனர்.அதன் பின்னர் அவர்கள் இராணுவ முகாமுக்குள் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு மிரட்ட ல் நிலையில் தான் தமிழ் மக்கள் தமது இருப்பை பாதுகாத்து வருகின்றனர்.அதன் பின்னர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யச் சென்றும் அது பல இல்லாமல் போய்விட்டது என்றார்.
பிற செய்திகள்





