சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த தொழிற்சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் இவ்வாறு பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply