யாழ்.வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த கிராம அலுவலர்கள், இன்று வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “கிராம அலுவலர் அத்தியாவசிய அலுவலரா? அநாவசிய அலுவலரா?”, “கொவிட் காலத்தில் அத்தியாவசிய அலுவலர்; பொருளாதார நெருக்கடி காலத்தில்…?”, “எரிபொருள் விநியோகத்தில் கிராம அலுவலர்களைப் புறக்கணிக்காதீர்கள்” – என்று எழுத்தப்பட்ட பதாதைகள் ஏந்தியிருந்தனர்.
அப் போராடத்தில் ஈடுபட்ட கிராம சேவகர்களை நாடி வினவிய பொழுது,
நாங்கள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் கிராம சேவகர்கள் . நேற்று சுகயீன விடுப்பு முறையில் இருந்து , இன்று ஒரு அடையாள அணி போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம் .
இந்த நாட்டில் அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் எங்களுக்கு இது வரை காலம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எங்களுக்கு வழக்கப்பட்டிருக்கின்ற ,டோக்கன் அடிப்படையில் நின்றால் கூட திருப்பி அனுப்புகின்றனர்.
காலை சென்று ,மதியம் வரை நின்றால் பிறகுதான் தெரிகின்றது பெட்ரோல் இல்லை என்று . அது மட்டுமல்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்றால் கூட, மது போதைகளில் வந்தும் ,குழப்ப நிலைகளை ஏற்படுத்துகின்றனர்.
இவற்றை எல்லாம் போலீசாரும் ,ராணுவத்தாரும் கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றனர் .
நிரப்பு நிலைய அதிகாரிகள் இங்கிதம் அற்ற வகையில் வார்த்தைகளை பிரயோகிக்கின்றனர் .
மன உளைச்சலுக்கும் ஆளாகின்றோம் .நாடு இதே நிலைமையில் செல்லுமானால் இறப்பு வீதம் கண்டிப்பாக அதிகரிக்கும் என்று பெண் கிராம சேவகர் ஒருவர் தெரிவித்தார் .
மேலும் ஓர் ஆண் கிராம சேவகரிடம் இப் போராட்டம் பற்றி வினவியபொழுது ,
நாங்கள் வெளி களத்தில் வேலை செய்பவர்கள் ,எங்களுக்கு பெற்றோல் அவசியம் , டோக்கன் முறையில் பெற்றோல் என்றனர், ஆனால் வழங்கப்படுவதில்லை .
எங்களுடைய பிரதேச செயலாளர் தயங்குகின்றார் , எல்லா விடயங்களிலும் நழுவின நிலையிலேயே காணப்படுகின்றார். இதனால் பாதிக்கப்படுவது நாங்கள்தான் என்று அவர் தெரிவித்தார்.





பிற செய்திகள்





