கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி அவர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து அவர்களது கோரிக்கை அடங்கிய மனு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்டது.
அரச அதிபருடன் கலந்துரையாடி அதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிற செய்திகள்





