மாராவில, தும்மோதர பகுதியில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாராவில, தும்மோதர பகுதியில் மணல் சேகரிக்கும் இடம்ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி டீசல் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட டீசல் மூன்று இலட்சத்திற்கும் கூடுதலான பெறுமதியுடையது எனத் தெரிவித்த மாராவில பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்





