நாட்டுக்கு அமெரிக்காவிடமிருந்து 20 மில்லியன் டொலர் உதவி

கொழும்பு,ஜுன் 28

இலங்கையில் உள்ள சிறார்களின் உணவு பாதுகாப்புக்காக அமெரிக்காவினால் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஜீ – 7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 800,000க்கும் மேற்பட்ட இலங்கை சிறுவர்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் எதிர்வரும் 15 மாதங்களில் 27,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்குதல், அத்துடன் பாடசாலை ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஆதரவளிப்பதும் இந்த நிதியுதவியின் நோக்கமாகும்.

அத்துடன், உணவு உற்பத்தியை அதிகரிக்க 30,000 விவசாயிகளுக்கு விவசாய உதவி மற்றும் நிதி உதவியை வழங்குதலும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும்.

அதேபோல், இந்த 20 மில்லியன் மனிதாபிமான உதவியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவரகத்தினால் (USAID) வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply