மூதூர் பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெறுவதற்காக கடந்த ஆறு நாட்களாக நீண்ட வரிசையில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் இன்று செவ்வாய்கிழமை வரை எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை.
அதேவேளை எரிபொருள் வழங்குவதற்காக இரானுவத்தினர் மோட்டார் சைக்கிள் இலக்கங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதையும் காணமுடிகின்றது.
இதன்போது பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கும்போது கடந்த 6 நாட்களாக இந்த இடத்திலே காத்திருக்கின்றோம். எரிபொருள் இன்னும் வரவில்லை.
சாப்பிட்டு சாப்பிட்டு எரிபொருளுக்கு கொண்டு வந்த பணமும் முடிவடையப் போகின்றது. எரிபொருள் வரும் என்றுதான் சொல்கிறார்கள். இன்னும் வரவில்லை, என்ன செய்வதென்று அறியாது இருக்கின்றோம்.
எங்களுக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறது. குடும்பத்தையும் பார்க்கவேண்டும். எரிபொருளுக்காக வரிசையில் நின்று கஷ்டப்பட்டுக் கொண்டிருருந்தால் குடும்பத்தை யார்தான் பார்ப்பது.
எரிபொருள் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிற செய்திகள்





