வெளியுறவு அமைச்சரை சந்தித்த அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஜூலி சுங் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

இதில் ஜனநாயகம் மற்றும் செழிப்பான இலங்கைக்காக அமெரிக்க அரசாங்கத்தால் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு பற்றி கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்துதல், இலங்கையர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கு இரு நாடுகளும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்று விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவும் கலந்துக்கொண்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply