கொழும்பு,ஜுன் 28
மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக எவ்வித அபராதமும் அறவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்மாகாண மோட்டார் வாகனத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை இணையவழி முறையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






