யாழில் நீளும் எரிபொருள் வரிசைகளும் மக்களின் பரிதாபங்களும்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை நாளாந்தம் உக்கிரமடைந்து வருகின்றது. இவ்வாறான நிலையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்து வருகின்றது.

அதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே நீண்ட வரிசையில் தமது வாகனங்களுடன் இரவு பகலாக காத்திருக்கின்றனர்.

இவ்வாறாக நாளுக்கு நாள் தீவிரமடையும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு இதுவரை அரசாங்கத்தால் உரிய தீர்வு வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை தாங்கள் தொழில்களுக்கு செல்லாது எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக தவம் கிடப்பதாகவும் இவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் காத்திருப்பதால் தமது வாழ்வாதாரங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உருவாகியுள்ள நீண்ட எரிபொருள் வரிசை காரணமாக வீதிப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் அரசாங்கத்தால் எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல்வேறு நடைமுறைகள் அறிவிக்கப்படினும் அவை ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலே குழப்பகரமான நிலைகளும் ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை ஈடுபடுத்தியுள்ள அரசாங்கம் எரிபொருளை சரியான முறையில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply