வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தலைவர் அண்ணாமலையிடம் தற்போதைய நாடு ரீதியான பிரச்சனைகள் மற்றும் ,கடற் தொழில் சார்ந்த பிரச்சனைகள் பற்றி வினவிய பொழுது ,
முதல் கடற் தொழில் சமூகங்கள் சேர்ந்து ,எங்களுக்கான பிரச்சனைகள் என்னவென்பதை இனங்காண வேண்டும் . தென் இலங்கையர்கள் வட பகுதியில் வந்து மீன் பிடிக்கின்றனர்,அதற்கு மாத்திரம் மண்ணெண்ணெய் இருக்குமென்றால் . எங்களுடைய மக்கள் எங்களுடைய இடங்களில் மீன் பிடிக்க ஏன் மணெண்ணெய் இல்லை ? இதற்க்கு காரணம் என்ன ?
இந்தியாவில் மீனின் விலை குறைந்துள்ளது .காரணம் தாராளமான மீன்கள் வட பகுதியில் பிடிக்கப்பட்டு ,அளவுக்கு மிஞ்சிய நிலையில் காணப்படுகின்றது .
இதற்க்கு காரணம் எங்களுடைய சமூகம் விழித்தெழாதது ஒன்றே . நாங்கள் நல்ல சமாசத்தை தெரிந்திருந்தால் அது நல்ல சம்மேளனம் உருவாகியிருக்கும் .
கடந்த காலங்களில் சம்மேளனம் என்ன செய்யுதென்றால் ஒரு வெளிநாட்டு தூதுவர் உங்கள் கடற்துறை மக்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது ,ஆழ் கடல் படகு கேட்கின்றது. இதை வைத்துக்கொண்டு நாடு முன்னேறுமா , மண்ணெண்ணெய் இல்லாது எவ்வாறு இயங்கும் ?
இந்தியாவிடம் இருந்து உணவு பொதிகள் உதவியாக கேட்ட பொழுது யூரியா கேட்டிருக்கலாம் , நாங்களே உற்பத்தி செய்து எங்களுடைய மக்களுக்கு கொடுத்திருப்போம் .யாரிடமும் சோற்றுக்கு ஏந்த வேண்டிய அவசியம் இல்லை .
இந்த அரசியல் ஏதையும் தூர நோக்குடன் செயற்படுத்தவில்லை , செயற்படுத்திய நபர்களையும் விட்டு வைக்க வில்லை ,விடயங்களும் கைப்பற்றபட்டன .
இந்த அரசியல் எதை செய்தது தமிழ் மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு , நாட்டை காப்பாற்ற முடியவில்லை என்றால் ,இளம் சந்ததியிடம் ஒப்படையுங்கள் .
யுத்தத்தால் அழிந்த பூமியை மீள கட்டி எழுப்ப வழி இல்லை ஆனால் , மக்கள் பணத்தில் அரசியல்வாதிகள் நல்ல வீடு வாசல்களுடன் வாழுகின்றனர் .
அங்கஜனுக்கும் நான் தெளிவாக சொல்லுகின்றேன் , உங்களுடைய அரசியல் விசித்திரங்கள் பற்றியும் எங்களுக்கு தெரியும் .நான் அங்கஜனிடம் என் பிள்ளைக்கு வேலை தேடி வரவில்லை ,கடிதம் கொண்டு வந்த என்னை ,கடிதத்தை வாங்கி வைத்து விட்டு நீங்கள் தந்த பொருள் என்ன ,carrom board ,என் வயதென்ன ?
இவர் வந்த நேரமே மக்களை விளையாட்டு பொம்மைகள் என்று நினைத்து விட்டார்கள் போல ! உன்னால் நாடு எவ்வாறு முன்னேறும் ?என கேள்வியெழுப்பினார்.
பிற செய்திகள்





