
சுகாதார சங்கங்களின் கூட்டமைப்பு 29/30 ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம்!
சுகாதார சங்கங்களின் கூட்டமைப்பினால் எதிர்வரும் 29 மற்றும் 30 ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டமொன்றை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளையும், நாளை மறுதினமுமென 2 நாட்கள் புதிய வடிவில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற் சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
தங்களது விடுமுறையை பெற்றுக்கொள்ள “பெற்றோல் இல்லாமையினால் வரமுடியவில்லை லீவு வழங்கவும்” என தெரிவித்து தந்தி மூலத்தகவல் அனுப்புவதன் மூலம் பணிப் புறக்கணிப்புச் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் 7 நாட்கள் மு.ப 7 தொடக்கம் பி.ப 4, மு.ப 7 தொடக்கம் பி.ப 9, மு.ப 7 தொடக்கம் மறு நாள் மு.ப 8 மணி என கடமையாற்ற வேண்டியுள்ள நிலையில் எரிபொருளுக்காக சுகாதார துறை உத்தியோகத்தர்கள் வரிசையில் நின்றால் எவ்வாறு தமது கடமைகளை மேற்கொள்வதென கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமை (24) உத்தியோகத்தர்கள் எரிபொருள் வரசையில் நின்றமையினால் பல வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகள் மூடப்பட்டு இருந்தமையும் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





