
சீன மக்களால் இலங்கை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000 மெட்ரிக் தொன் அரிசி கொண்ட நாற்பத்தி நான்கு கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளதுடன், அது செவ்வாய்க்கிழமை (28) இலங்கையின் கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை முழுவதும் உள்ள 7,900 பாடசாலைகளுக்கு சீனா மொத்தம் 10,000 மெட்ரிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்குவதாகவும், அதன் 6 மாதங்களுக்கு பாடசாலை உணவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தூதுவர் Qi Zhenhong தெரிவித்தார்.





