பாக்கிஸ்தானுக்கு பொருளாதார இலக்குகளை நிர்ணயிக்கின்றது நாணய நிதியம்

பாக்கிஸ்தான் கடும் பொருளாதார தழும்பலில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கின்ற சூழலில், உலக நாணய நிதியம் உதவிகளை நிபந்தனைகளுடன் வழங்க முன்வந்திருக்கின்றது.

ஆரம்பத்தில் பாக்கிஸ்தானுக்கு உதவி செய்ய மறுத்திருந்த நிலையில், தற்போது பாக்கிஸ்தானின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்ற நிலையில் நிபந்தனைகள் மற்றும் இலக்குகளை நிர்ணயித்து நிதியுதவியினை வழங்க உலக நாணய நிதியம் முன்வந்திருப்பதாகவும், இதனை பாக்கிஸ்தான் அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பாக்கிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் பாக்கிஸ்தான் அரசு, உடனடி தேவை காரணமாக 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை கோரியிருந்த நிலையில் தற்போது 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளுடன் முன்வந்திருப்பதாகவும், பின்னர் மிகுதி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply