குளத்தில் தவறி விழுந்து 03 வயது சிறுவன் பலி

மடுல்லக்கலை, ஜுன் 29

வீட்டுக்கு முன்னால் உள்ள குளத்தில் தவறி விழுந்து 03 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே காட்டின் மேல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் மடுல்லக்கலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply