அவசர வழக்குகளுக்கு மாத்திரம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

அவசர வழக்குகளுக்கு மாத்திரம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் அனைத்து நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வழக்கை ஒத்திவைப்பது குறித்தும், சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்தும் சட்டத்தரணிகள் சங்கங்களுடன் விவாதித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply