பசில் தலைமையில் பெரமுனவின் கலந்துரையாடல்

கொழும்பு, ஜூன் 23

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய
அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான
பசில் ராஜபக்க்ஷ தலைமையில், கட்சித்
தலைமையகத்தில் நடைபெறும்
கலந்துரையாடல்களுக்கு தலைமை
தாங்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,
தொழிற்சங்கங்கள், உள்ளூராட்சி மன்றம்
ஆகியவற்றுடன் இணைந்த பெண்கள் மற்றும்
இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்
இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு
காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்,
கட்சியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய
விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில்
கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர்
தெரிவித்தார்.

Leave a Reply