புகையிரத என்ஜினில் இருந்து டீசல் திருடிய நபர்!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தில் இருந்து நபரொருவர் டீசலை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத இன்ஜினில் இருந்து அந்த நபர் டீசலை திருடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

குறித்த நபர் சிலாபம் புகையிரத நிலையத்தில் கடமையாற்றும் உதவி புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 15 லீட்டர் டீசலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இன்று காலை கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்தின் இயந்திரம் சிலாபம் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்ஜினில் இருந்த எரிபொருளை சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply