பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட கிண்ணியா நகர சபை சுகாதார ஊழியர்கள்

திருகோணமலை – கிண்ணியா நகர சபையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (28) காலை 9 மணி அளவில் கிண்ணியா நகர சபைக்கு முன்னால் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினை, தூர இடங்களிலிருந்து துவிச்சக்கர வண்டி மூலம் வருவதனால் ஏற்படும் பிரச்சினை அவற்றுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே பணிப்பகிஷ்கரிப்பு இன்று நடைபெற்றது

சுமார் 50க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் சுகாதார ஊழியர்களில் குறிப்பிட்ட சிலரை நகர சபை தவிசாளர் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி உங்களுக்கான பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்த்து தருவதாக கூறியதை அடுத்து சுகாதார ஊழியர்கள் மீண்டும் தமது கடமைகளில் ஈடுபட்டனர்

சுகாதார ஊழியர்களான நாங்கள் நகர சபைக்கு முன்னால் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் பின்னர் நகரசபைத் தவிசாளர் எங்களை அழைத்து எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று அதன் பின் மீண்டும் நாங்கள் கடமைகளில் ஈடுபடுகின்றோம் எனக் கூறினார்

நகர சபைக்கு முன்னால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டோம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் இதனை அடுத்து செயலாளர் அவர்களிடம் எரிபொருள் பிரச்சினை போக்குவரத்தில் சிக்கல் முதலானவற்றை தெரிவித்தோம் அதற்கு எங்களுக்கு சாதகமான முடிவை தந்ததன் பிரகாரம் மீண்டும் நாங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம் எனத் தெரிவித்தனர்

இது விடயமாக கிண்ணியா நகரசபை தவிசாளர் எம்.எம்.நிவாஸ் கருத்து தெரிவிக்கும்போது,

நான் வேலைக்கு வருகின்றபோது சுகாதார ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களை காரியாலயத்துக்கு அழைத்து ஏன் ? இந்த பகிஷ்கரிப்பு என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், போக்குவரத்துப் பிரச்சினை, எரிபொருள் பிரச்சினை என என்னிடம் கூறினார்கள் அவற்றை மிக விரைவில் நிவர்த்தி செய்து வருவதாக நான் கூறியதை அடுத்து மீண்டும் தங்களுடைய பணிகளில் ஈடுபட்டார்கள்

பிறசெய்திகள்

Leave a Reply