மடுமாதா  திருத்தலத்துக்கான பாதயாத்திரை  நிறைவு! 

மன்னார் மடுமாதா  திருத்தலத்துக்கு வடமராட்சி கிழக்கில் இருந்து  கடந்த 27 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமான பாதயாத்திரை இன்று நிறைவடைந்தது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை பளை, கிளிநொச்சி, முறிகண்டி சென்று அங்கிருந்து  கொக்காவில் வீதி வழியாக ஐயன்கன்குளம் வரை சென்று மல்லாவி வழியாக நட்டாங்கண்டலைச் சென்றடை ந்து, மடு திருத்தலத்தை இன்று  சென்றடைந்தது.

மடு திருத்தலத்தின் உற்சவம் நாளைமறுதினம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு குறித்த பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply