மொறட்டுவவில் இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

மொறட்டுவை – கட்டுபெத்த, பிலியந்தலை வீதியில் இன்று பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிய ரக வேன் ஒன்றுக்குள் கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்களும் உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply