யாழ்ப்பாணத்தில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, வைத்தியசாலை மாடியிலிருந்து குதிக்க முயன்றுள்ளார்.
அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், புறநகர் பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி, மூன்று பேரால் வாகனத்தில் கடத்தப்பட்டதாக உறவினர்கள் முறைப்பாடு செய்தனர்.
அவரது கடத்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் முழவை பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை கிளிநொச்சி வைத்தியசாலை முதலாவது மாடியிலிருந்து குதிக்கும் முயற்சியில் மாணவி ஈடுபட்டார்.
எனினும், அவர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிறசெய்திகள்





