8 லட்சம் முச்சக்கரவண்டி சாரதிகள் பாதிப்பு

கொழும்பு,ஜுன் 29

நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக சுமார் 800,000 முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளும்  எரிபொருள் பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், எமக்கு உரிய முறையில்  நிவாரணங்களை பெற்று தாருங்கள். இல்லையேல் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசிறி கருத்து தெரிவிக்கையில்,

முச்சக்கர வண்டி சாரதிகள் அத்தியாவசிய சேவை வழங்கும் தரப்பினராக அல்லது பொது போக்குவரத்து பிரிவினராக உள்ளடக்கவில்லை.

கடந்த 12 ஆம் திகதியிலிருந்து 65 மணித்தியாலயங்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்தேன். நேற்று முன்தினம் மாலை டோக்கன் வழங்கப்பட்டது. பசியில் இருக்கும் ஒருவருக்கு பிரியாணி வழங்கும் செயற்பாடு இதுவாகும்.

பொறுப்பு வாய்ந்த தரப்பினர் இதற்கு பதில் வழங்க வேண்டும். 10 நாட்களுக்கு எவ்வாறு எமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியும். என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply