
கொழும்பு,ஜுன் 29
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பொதுமக்களுக்கு கொன்சியூலர் சேவைகளை வழங்குவது தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு, ஜூன் 30, 2022 முதல் ஜூலை 10, 2022 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் மேற்குறிப்பிட்ட தினங்களில் சேவைகளை வழங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்காக பின்வரும் மின்னஞ்சல்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு மேலும் பொதுமக்களுக்கு தெரிவிக்கிறது.
கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு – கொழும்பு – [email protected]
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – யாழ்ப்பாணம்- [email protected]
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – மாத்தறை- [email protected]
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – கண்டி- [email protected]
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – திருகோணமலை – [email protected]
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – குருணாகலை – [email protected]


