ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி உற்சவம்

அராலி மேற்கு நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி உற்சவமானது நேற்றையதினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வேள்வி உற்சவத்தின் போது அம்பாள் சிங்க வாகனத்தில் எளுந்தருளியாக ஆலய வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதன் போது பலகார படையல்கள் மற்றும் சேவகர் மடை போட்டு வழிபாடு நடைபெற்றது.

ஆலயத்தின் திருவிழாவானது கடந்த 21ம் திகதி ஆரம்பமாகி நேற்றையதினம் வேள்வி உற்சவம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எட்டாம்மடை வைரவர் வழிபாடு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply