யாழில் காணாமல் போன சிறுமியின் உறவுகள் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம்! (படங்கள் இணைப்பு)

கடந்த 24ம் திகதி இராசாவின் தோட்ட வீதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவரை அதே கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களால் கடத்தப்பட்டு கிளிநொச்சி இரணைமடு காட்டு பகுதியில் இருந்து மீட்கப்பட்டார் .

இந்நிலையில் இன்றையதினம் சிறுமியின் உறவுகளால் இன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஒர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு ஆளுநரிடம் நீதி கோரிய கடிதம் ஒன்றினை கையளிக்க இருந்த வேளையில் இன்றைய தினம் அரச ஊழியர்களுக்கான விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் அலுவலக ஊழியர்கள் சமூகமளிக்கவில்லை.

ஆகையால் சிறுமியின் உறவினர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், கடத்தப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும், பாலியல் கொடுமைகள் தவிர்க்கப்பட வேண்டும் போன்ற சுலோகங்கங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply