பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் முன்மாதிரியான செயற்பாடு!

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபர் ஆசிரியர்களின் முன்மாதிரியான செயற்பாடு தற்காலத்தில் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போசாக்கு நிறைந்த உணவுகளை மாணவர்கள் உட்கொள்வது குறைந்த வண்ணம் உள்ளன. அண்மையில் ஐக்கிய நாடு சபையும் இந்த தகவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு போஷாக்கான உணவு கிடைப்பதை முடிந்தவரை உறுதி செய்யும் வகையில் பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்களுக்கு இலைக் கஞ்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த இலக்கஞ்சி தயாரிப்பதற்கான செலவுகளை பாடசாலையின் அதிபர் எஸ். புனிதன் மற்றும் ஆசிரியர்கள் அவர்களது சொந்த நிதியினை பயன்படுத்தி இலைக்கஞ்சி தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

Leave a Reply