எரிபொருள் பெற்றுக்கொள்வதில் சுகாதார பணியாளர்களுக்கு இன்றும் அசௌகரியம்!

சுகாதார சேவையாளர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த வாரத்தை போன்று இன்றைய தினமும் பணியாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சில இடங்களில் சுகாதார பணிக்குழாமினர் மற்றும் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அடுத்த வாரம் சுகாதார சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினருக்கு நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 82 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

எனினும், இன்றைய தினமும் சில பகுதிகளில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக சென்ற சுகாதார பணிக்குழாமினர் இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.

இதேவேளை, சுகாதார பணிக்குழாமினருக்கான எரிபொருள் விநியோகத்தை விரிவுப்படுத்த வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உபதலைவர் சரவணபவன் கோரியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply