கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் நீராடச் சென்ற இளைஞன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியைச்  சேர்ந்த 19 வயதான இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply