
முல்லைத்தீவு -அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சுமார் 20 அடி நீளம் கொண்ட புள்ளிச்சுறா ஒன்று நேற்றுமுன்தினம் கரையொதுங்கியுள்ளது. முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகுகள் அண்மை நாள்களாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கரையொதுங்கிய சுறா மீனும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகின் தாக்கத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று முல்லை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


