உதிரிப் பாகங்கள் இல்லாததால் 500 பேருந்துகள் சேவை நிறுத்தம்!

பேருந்துகளின் உதிரிப்பாகங்கள் இல்லாததால் இலங்கைப் போக்குவரத்துக்குச் சொந்தமான 500 பேருந்துகள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பல பொருள்களுக்குத் தட்டுப்பாடு எற்பட்டுள்ளது. இந்த நிலையிலே பேருந்துகளின் உதிரிப்பாகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் இ.போ.ச வின் ஏனைய பேருந்துகள் வழமைபோன்று சேவையில் ஈடுபடும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டால் தனியார் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கைத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply