வாழைச்சேனையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

வாழைச்சேனையில் வைத்து 38 வயதுடைய நபரொருவர் ஹெரோயின் போதைபொருளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது மக்களடி வீதி, வாழைச்சேனை-4 எனும் முகவரியில் வைத்து போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட வேளை இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply