கடல் அலையில் சிக்கி பல்கலைக்கழக மாணவர்கள்!

சீதாகலை பெலிவத்தை இயற்கைக் குளத்தில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கடல் அலைகள் திடீரென குளத்தில் மோதி மூவரையும் குளத்தில் இருந்து கடலுக்குள் இழுத்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் காலி தல்கம்பல பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ ஜயோதா என்ற 22 வயதுடைய இளைஞரே காணாமல் போயுள்ளார்.

உயிர் பிழைத்த இரண்டு மாணவர்களும் தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றையதினம் (02) காலை இந்த மூன்று மாணவர்களும், ருஹுனு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மற்றுமொரு மாணவர் குழுவுடன் சீதாகலை இயற்கை குளியல் பகுதிக்கு வந்துள்ளனர்.

அவர்களில் பலர் இந்த இயற்கையான கடல் குளத்தில் நீராடும்போது திடீரென அலைகள் உள்ளே வந்தபோது விபத்து ஏற்பட்டது.

காணாமற்போன மாணவனை தேடும் நடவடிக்கைகளை பிரதேசவாசிகளும் திக்வெல்ல பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply