வெல்லவாய அமைதியின்மை: 13 பேர் கைது

வெல்லவாய,ஜீலை 7

வெல்லவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply