ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பு,ஜுலை 7

அரசியலமைப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமைகளை பொலிஸார் மதிப்பதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று (07) விசேட செய்தி ஒன்றை வெளியிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார். எனினும், சட்டத்தை மீறி வன்முறையுடன், அரச தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வண்ணம் செயற்பட்டால் பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் இதன்போது எச்சரித்தார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை நாடு முழுதும் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேரடியாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

Leave a Reply