43 படையணியுடன் எங்கள் பலத்தை நிரூபிப்போம்! பந்துல திட்டவட்டம்

43 படையணியுடன் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல சந்தரசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,

ஜீலை 9ம் திகதி போராட்டத்திற்காக கட்சி சார்பற்றவர்கள் நாடு முழுவதுமுள்ள மக்களை திட்டியுள்ளனர்.

மேலும், ஜனாதிபதியை பதவியில் இருந்து விரட்டவும், உறுதியற்ற அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காகவும் போராட்டத்தை வலுப்படுத்தவுள்ளோம்.

இப் போராட்டத்தை அமைதியான முறையில் மேற்கொள்ள அன்றிலிருந்து எங்களுடைய பணி விரிவாக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் பதவி விலகுவதற்காக, கடந்த காலங்களில் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்ட மக்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்

இதன் காரணமாக, இப் போராட்டத்தை மக்களின் உறுதுணையோடு அமைதியான முறையில் மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

43 படையணி என்ற முறையில், எதிர்வரும் 9ம் திகதி எங்களுடைய முழு சக்தியுடன் இப் போராட்டத்திற்கு பங்கெடுக்க உள்ளோம்.

இப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க நீதி துறை, தொழிற்சங்கங்களையும் இணைத்துள்ளோம்.

இதேவேளை, இப் போராட்டத்தின் போது பொலிஸாரால் எதும் அசம்பாவிதம் நடைபெறுமாயின் அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்க நாங்கள் தாயாராக உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply