பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்துக்கு தடை விதிக்குமாறு கோரிய பொலிஸார் – நீதிமன்றம் நிராகரிப்பு!

<!–

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்துக்கு தடை விதிக்குமாறு கோரிய பொலிஸார் – நீதிமன்றம் நிராகரிப்பு! – Athavan News

கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீதிகளில் பிரவேசிப்பதற்கு, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்துக்கு எதிராக தடை விதிக்குமாறு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த பிரதேசத்துக்கு உட்பட்ட வீதிகளில் இன்றும் நாளையும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் நுழைவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கொழும்பு பிரதம நீதிவான் நந்தன அமரசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார்.


Leave a Reply