பறக்க தயாராகும் பட்சி- மனோவும் கலாய்ப்பு!

ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாளையதினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று முதல் கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நாளை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

பட்சி பறக்க போகுதாம். போகும் முன், நரியை விலக்கி விட்டு, அங்கே ஓநாயை இருத்தி விட்டு, பறக்க தயாராகுதாம் என்றவாறு பதிவினை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply