யாழ். புன்னாலைக் கட்டுவனிலிருந்தும் அரசிற்கு எதிராக சைக்கிள் பேரணி

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனிலிருந்து சைக்கிள் பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது.

“கோட்டா – ரணில் ஆட்சியே வீட்டிற்கு போ” என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

மக்கள் வயிற்றில் அடிக்காதே எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் துவிச்சக்கரவண்டி பேரணியானது சற்றுமுன் யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் மாபெரும் போராட்டமொன்று இன்றைய தினம் நடத்தப்படவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கொழும்பு நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply