ரம்புக்கனை சம்பவம்- நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை !

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று கேகாலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply