பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு?

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் பாண், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள பேக்கரிகளுக்கான 50 சதவீத கோதுமை மா விநியோகத்தை இரண்டு பிரதான நிறுவனங்கள் செய்கின்றன.
அவர்கள் விலையை 250 ரூபாயாக குறைத்தால் மாத்திரமே பாண் விலை குறையும்.

குறித்த இரு நிறுவனங்களும் 280 முதல் 310 ரூபாய் வரை மாவை விற்பனை செய்கின்றன. அவை விலையைக் குறைக்கும் என்பதை நம்ப முடியாது.

விலை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் சந்தையில் 350 ரூபாவிற்கே மா விற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply