தேசிய தைக்வொண்டோ போட்டியில் மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை

2026ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் மூவர் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பண்டாரவளை உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செப்டெம்பர் 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த தேசிய மட்டப் போட்டியில், வடமாகாண பாடசாலைகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களைப் பெற்ற பாடசாலையாக மாங்குளம் மகாவித்தியாலயம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்களான இராஜசேகரம் ஈழமைந்தன், 58–63 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும்,

இராஜசேகரம் ஜெறின், 55–59 கிலோ எடைப்பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும்,

கண்ணன் சுடரிலினி, 62–67 கிலோ எடைப்பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

தேசிய மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாங்குளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் பதக்கங்களை வென்றுள்ளமை பாடசாலைக்கும், மாங்குளம் பிரதேசத்திற்கும், கல்வி வலயத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

மேலும், வடமாகாண பாடசாலைகளில் இம்முறை தேசிய தைக்வொண்டோ போட்டியில் அதிக பதக்கங்களைப் பெற்ற பாடசாலையாக மாங்குளம் மகாவித்தியாலயம் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply