update- முகமாலை பஸ் விபத்து: 46 பேர் இதுவரை காயம்

கிளிநொச்சி,ஒக் 15

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று சனிக்கிழமை (15) பஸ் ஒன்றுடன் டிப்பர் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply