அயர்லாந்து அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை அணி விபரம் நாளை!

பெத்தும் நிசங்க மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோரின் உடல் நிலை குறித்து மதிப்பிட்டதன் பின்னர் இருபதுக்கு20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை அணி விபரம் அறிவிக்கப்படவுள்ளது.

அதாவது, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கை நேரப்படி நாளை முற்பகல் 9.30க்கு இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் பெத்தும் நிசங்க மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோரது உடல் நிலை குறித்து மதிப்பிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனபடிப்படையில் இலங்கை அணியின் விபரம் நாளைய தினமே வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பெத்தும் நிசங்க மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோரின் உடல் நிலை முன்னேற்றமடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply