
இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் 7 ஆவது பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பூஜித விதான நியமிக்கப்பட்டுள்ளார்.
ரியர் அட்மிரல் பூஜித விதான அக்குரேகொடையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதுவரை காலம் இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்த ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க அண்மையில் சேவையிலிருந்த ஓய்வு பெற்றுச் சென்றமையடுத்தே அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக இருந்த ரியர் அட்மிரல் பூஜித விதான புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்

