ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் – அண்ணாமலை

ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை கைவிட்டு, தமிழை வளர்க்க தி.மு.க. அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க.வின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை எதிர்த்து, தமிழகத்தில் பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன் என தமிழக அரசிடம் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் செய்வதறியாது சிக்கித் தவிக்கும் தமிழக முதல்வர், எதிர்வரும் 4 ஆம் திகதி ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

Leave a Reply