‘இலங்கை நண்பர்கள் குழு’ ஐரோப்பிய நாடாளுமன்றில்

ஐரோப்பிய நாடாளுமன்றிலுள்ள ‘இலங்கை நண்பர்கள் குழு’ கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

ஐரோப்பிய மக்கள் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் செக் குடியரசின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் ஸ்டெச்சோவ்ஸ்கியை இந்தக் குழுவுக்கு தலைவராகவும் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த மக்சிமிலியன் க்ராவை குழுவின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆரம்ப நிகழ்வில் இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய இலங்கை உறவுகளின் நிலை ஆகியவை குறித்து ‘இலங்கை நண்பர்கள் குழு’ தூதுவர் ஆசிர்வாதம் விளக்கமளித்தார்.

அத்துடன் இலங்கைக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் இந்தக் குழு செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

‘இலங்கை நண்பர்கள் குழு’ 2006 இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு பிரச்சினை அடிப்படையில் ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் முறைசாரா குழு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply