பிச்சைக்காரனுக்கும் மேடை அமைத்து பேசமுடியும் – மைத்திரி

தெருவில் பிச்சைக்காரனுக்கும் மேடை அமைத்து அதில் ஏற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி பரந்துபட்ட கூட்டணியுடன் போட்டியிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆளும்கட்சியின் பேச்சுக்கு உட்பட்டு செயற்படுகின்றார் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தினாலும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply